தசை நார் கிழிவு தவிர்க்க

Loading...

தசை நார் கிழிவு தவிர்க்க

பாதுகாப்பு டிப்ஸ்
* வார்ம்அப் செய்யாமல் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது. விளையாட்டு வீரர்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்த பின்னர்தான் விளையாட வேண்டும்.

* உடல் பருமனாக இருப்பவர்கள் ஆர்வக்கோளாறில் ஜிம்மில் கடினமானப் பயிற்சியில் ஈடுபடக் கூடாது. ஆரம்பக்கட்ட பயிற்சிகள் செய்த பின், பயிற்சியாளர் அறிவுறுத்தினால் மட்டுமே கடினமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

* வைட்டமின் டி சத்து அவசியம். எனவே, தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

* காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், வார்ம்அப் பயிற்சிகள் செய்யாமல் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது.

* செயற்கையான புரோட்டீன் பானங்களைச் சாப்பிடுவது நல்லது அல்ல. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அளவான புரதமும் உடற்பயிற்சியுமே தசைகளையும் தசைநார்களையும் வலுவாக்கும்.

Loading...
Rates : 0