முட்டை சில்லி

Loading...

முட்டை சில்லி

தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை
வெங்காயம்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
தனியா தூள்
கரம் மசாலா
பச்சை மிளகாய், நன்கு நறுக்கியது
பூண்டு
சோள மாவு
தக்காளி கூழ்
புதிய கருவேப்பிலை ஒரு குச்சி அழகுபடுத்த
எண்ணெய்
உப்பு சுவைகேற்ப‌
தயாரிப்பு முறை:
1. சோள மாவு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒரு கலவையாக தயார் செய்து கொள்ளவும்.
2. இந்த கலவையில் பாதியாக கட் செய்த முட்டையை பிரட்டி ஒரு கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ள‌வும், பின் இதை ஒரு சமையலறை துண்டின் மீது தனியே வைத்துக் கொள்ளவும்.
3. அதே எண்ணெயை 2 தேக்கரண்டி ஒரு கடாயில் எடுத்துக் கொண்டு, இதில் நன்கு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தக்காளி கூழ் சேர்த்து நன்கு வத‌க்கவும்.
5. வேகவைத்த முட்டைகளை இதில் சேர்த்து, சுவைக்கேற்ப‌ உப்பு சேர்க்கவும். இதை மெதுவாக கலந்து மேலும் ஒரு சில நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
6. கறிவேப்பிலை கொண்டு அழகுபடுத்தி சூடாக பரிமாறவும்

Loading...
Rates : 0