சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் `2.0′?

Loading...

சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் `2.0′?

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி `2.0′ படம் சீன மொழியிலும் டப் செய்யப்பட்டு சீனாவில் சுமார் 15,000 திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபரில் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழாவும், நவம்பரில் டீசரும், டிசம்பரில் டிரைலரும் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Loading...
Rates : 0