துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட பிரபல நடிகை

Loading...

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட பிரபல நடிகை

மலையாள நடிகர் ஜோஸ் – ரத்னபிரபா தம்பதியரின் மகள் பிரணிதி. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான `கம்பீரம்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும், `4 ஸ்டூடன்ஸ்’, `குரு தேவா’, `வணக்கம் தலைவா’, `காற்று உள்ளவரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சனையால் பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி அவரது மாமா மீது தளசேரி போலீசில் பிரணிதி புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிப்பதாவது, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் துப்பாக்கியை இரவு நேரத்தில் தாத்தா வட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...
Rates : 0