உருளைகிழங்கு ரய்தா

Loading...

உருளைகிழங்கு ரய்தா

தேவையான பொருட்கள் :

உருளைகிழங்கு – 100 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்ப
கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தாளித்து கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், தாளித்த பொருட்கள் ஆகியவற்றை உருளைகிழங்கில் சேர்த்து சூப்பராக கிளற வேண்டும். இதனை தயிருடன் கலந்து ருசியாக சுவைத்து மகிழலாம்.

Loading...
Rates : 0