ஈஷா ஹெல்த் மிக்ஸ் கஞ்சி

Loading...

ஈஷா ஹெல்த் மிக்ஸ் கஞ்சி


தேவையானவை:

ஹெல்த் மிக்ஸ் பவுடர் – 3 டீஸ்பூன்
தண்ணீர் – 200 மி.லி
தேங்காய்ப்பால் அல்லது தேங்காய்த் துருவல் – அரை கப்
எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்த நிலக்கடலை – சின்ன கப்
வெல்லம் – சுவைக்கு ஏற்ப.


செய்முறை:

தண்ணீரில் ஹெல்த் மிக்ஸ் பவுடரைக் கொட்டி, வெல்லம் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

இறக்கிவைக்கும் சமயத்தில், தேங்காய்ப்பால் அல்லது தேங்காய்த் துருவல் சேர்க்க வேண்டும். விருப்பப்படுவோர் ஊறவைத்த நிலக்கடலையைக் கஞ்சியில் போட்டுக் குடிக்கலாம் அல்லது கஞ்சி குடித்து முடித்த பின், நிலக்கடலையைச் சாப்பிடலாம்.

பலன்கள்: காபி, டீ-க்குப் பதிலாக இந்த சத்துமாவுக் கஞ்சியைக் குடிக்கலாம். குழந்தைகளுக்குக் கொடுத்துவர, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கஞ்சியுடன் தேங்காய்ப்பால் சேர்வதால், கூடுதல் சுவையுடன் இருக்கும் ஹெல்த் டிரிங்க் இது.

Loading...
Rates : 0