கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்

Loading...

கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்

வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.

உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.செடிப்பசலை என்ற இனம் உண்டு.

பசலையில் முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது.

ரத்தம் விருத்தியாகும் பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது.

இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன.

வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும். பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.

எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் ஹிமொகுளோபின் உள்ளது.

இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.

இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

. இலையின் சாறு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களின் மலச்சிக்கல் போக்க பயன்படுகிறது.

நீரிழிவு குணமடையும் பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது.

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது.

இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது.

சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது.இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.

இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன.

கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. தரைப்பசலை, கொடி பசலை என இரண்டு வகைகளாக காணப்படும் பசலைக் கொடிகளில் சிவப்பு நிறத்தண்டுகளையும், சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த இலைகளையுடைய கொடி பசலையே உணவுடன் கூட்டாக செய்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ள பசலைக்கீரையை வாரம் இரண்டு முறையாவது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன், உடல் உஷ்ணம் தணியும்.

இதோ பசலைக்கீரை கூட்டு செய்யும் முறை:

பசலைக் கீரையை நன்கு அலசி காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

100கிராம் பாசிப்பருப்பை மைய வேகவைத்து அதில் வதக்கிய வெங்காயம் 100கிராம், கடுகு, அரைத்தேக்கரண்டி, உழுந்தம்பருப்பு – அரைதேக்கரண்டியை நல்லெண்ணெயில் தாளித்து, வெந்த பாசிப்பருப்பில் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.

அதன்பின் அரைமூடி தேங்காயை அரைத்தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு அரைத்து அத்துடன் மஞ்சள்தூள், 1தேக்கரண்டி, மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பாசிப்பருப்புடன் கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவையான நீர்ச்சத்து மிகுந்த பசலைக்கீரை கூட்டை மதிய உணவுடன் அடிக்கடி உட்கொள்ள உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் மற்றும் அக்கி, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.

குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலை நாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவைத் தடுக்கிறது. .

மருத்துவக் குணங்கள்: இதில் மிக அதிகமாக உள்ள பச்சயம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. மேலும் இது ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.

இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:

கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் தக்காளி சேர்த்துக் கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க் குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.

Loading...
Rates : 0