ஸ்டஃப்டு பஜ்ஜி

Loading...

ஸ்டஃப்டு பஜ்ஜி

தேவையானவை:

புதினா சட்னி
கொத்தமல்லி சட்னி
வெங்காய சட்னி (ஏதேனும் ஒன்று) – ஒரு கரண்டி
உருளைக்கிழங்கு – 3 (தோல் நீக்கி, வில்லைகளாக நறுக்கவும்)
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 20 கிராம்
கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.

நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளின் மீது சிறிதளவு சட்னியை பரவலாக தடவி, சட்னி உட்பக்கம் இருக்குமாறு வில்லைகளை மூடி, கரைத்த மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சட்னிக்குப் பதில் தக்காளி சாஸ் பயன்படுத்தியும் இந்த பஜ்ஜியைத் தயாரிக்கலாம்.

Loading...
Rates : 0