ஆபத்தான தொப்பையை சீக்கிரம் குறைப்போம்

Loading...

ஆபத்தான தொப்பையை சீக்கிரம் குறைப்போம்

நீங்க ஒல்லியா, குண்டா/ ஆணா, பெண்ணா என்பது கூட பிரச்சனை இல்லை. உங்களுக்கு தொப்பை இருந்தால் அது எந்த வகை என்பதுதான் முக்கியம்.

என்பது இப்படி சதையை கிள்ளி பிடிக்க முடியும். தொப்பையை மேலும், கீழும் நகர்த்த முடியும். காரணம் அதில் உள்ல கொழுப்பு subcutaneous fat எனும் வகைகொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கபடும் கொழுப்பு.

வலப்புறம் இருப்பவர் தொப்பை கல் மாதிரி கெட்டியான தொப்பை. இதை கிள்ளுவதும், நகர்த்துவதும் சிரமம். இவருக்கு இருக்கும் தொப்பை ஆபத்தான கொழுப்பால் நிரம்பிய தொப்பை. இவருக்கு காணப்படும் கொழுப்பு Visceral fat எனப்படும். இது தான் மிக ஆபத்தான கொழுப்பு. இந்த வகை கொழுப்பு தான் ஹார்ட் அட்டாக், டயபடீஸ், ரத்த அழுத்தம்

மற்றும் சில வகை கான்சர்களை வரவழைக்கும் கொழுப்பு. இதுதான் கிட்னி, ஈரல் மாதிரி உள்ளுறுப்புக்கள் மேல் படியும்.

உங்களுக்கு இந்த இரன்டில் எந்த வகை தொப்பை இருக்குது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

அளவு நபடாவைக் கொண்டு கீழே படுத்துகொண்டு வயிற்றின் சுற்றளவை (தொப்புளுக்கு மேல் உள்ல சுற்றளவு) அளக்கவும். பின் எழுந்து நின்று கொண்டு அதே அளவை மீண்டும் அளக்கவும். இரண்டு
அளவுக்கும் வித்தியாசம் 1 இஞ்சுக்கும் கீழே என்றால் உங்களுக்கு இருப்பது
ஆபத்தான visceral கொழுப்பு.

ஒரு இஞ்சுக்கும் அதிகமான வித்தியாசம் இரண்டு அளவுக்கும் உள்ளது என்றால் நீங்கள் ஆரோக்கியமானவராகஉள்ளீர்கள்.காரணம் உங்களுக்கு
இருப்பது ஆபத்து குறைவான வகை கொழுப்பாகும். ஆனால் அதையும் சீக்கிரம் கரைத்து விடுவது உடலுக்கும் உங்களுக்கும் ஆரோக்கியத்தைத் தரும்

Loading...
Rates : 0