இந்த 10 விடயங்களை பெண்கள் அதிகம் கவனிப்பார்கள் ஆண்களே உஷார்

Loading...

இந்த 10 விடயங்களை பெண்கள் அதிகம் கவனிப்பார்கள் ஆண்களே உஷார்

பொதுவாகவே பெண்கள் எப்போதும் கொஞ்சம் உஷாராகவே தான் இருப்பார்கள். ஒரு ஆண் தன்னிடம் பேசும் போது அவன் கண்ணை வைத்தே அவனை பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். அதுவும் முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பதை பற்றித் தெரியுமா?.

* பெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது. நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள்.

* நீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள்.

* பெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.

* பெண்கள் உங்கள் கண்களை பார்த்தே, நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், நீங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.

* இந்த விஷயம் உங்களால் நம்ப முடியாது ஆனால் அது தான் உண்மை. பெண்கள் ஆண்களின் கைகளை அதிகம் பார்ப்பர். அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கவனிப்பார்கள்.

* ஆள் பாதி ஆடை பாதி என்பது போல, உங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸ் என்ன என்பதை உங்கள் ஆடையை பார்த்தே கணித்து விடுவார்கள்.

* நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், உங்களை நம்பலாமா கூடாதா என்பதை உங்கள் செயல்களிலே தெரிந்து கொள்வார்கள்.

* நீங்கள் அவர்களிடம் பேசும் போது, மற்ற பெண்களை பார்த்தால் உங்களை ஜொள்ளு பார்ட்டி என்று நினைத்து விடுவார்கள்.

* ஆண்கள் தன்னை குதூகலமான (ஜாலி) பேர்வழி என்று காட்ட தொடர்ந்து பேசி கொண்டே இருந்தால், அவர்களை இனி சந்திக்க கூடாது என்ற முடிவுக்கு பெண்கள் வந்து விடுவார்கள்.

* உங்கள் காலணிகள், பாலிஷ் செய்யப்பட்டுள்ளதா நீங்கள் சுத்தமாக இருக்கீறீர்களா என்பதை கவனிப்பார்கள். இல்லையெனில் உங்களை அழுக்கு மூட்டை பட்டியலில் சேர்த்து விடுவார்.

Loading...
Rates : 0