இந்த 7 அறிகுறிகள் உள்ளதா உங்களுக்கும் கர்ப்பபை புற்று நோய் இருக்கலாம்

Loading...

இந்த 7 அறிகுறிகள் உள்ளதா உங்களுக்கும் கர்ப்பபை புற்று நோய் இருக்கலாம்

கருப்பை புற்று நோய் எதனால் உண்டாகிறது என சொல்ல முடியாது. இது சத்தமில்லாமல் வந்து கொல்லும் உயிர் கொல்லி என்பதை மருத்த உலகம் ஒத்துக்கொள்கிறது.

கருப்பை புற்று நோய் பற்றி விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம். கருப்பை புற்று நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

சின்ன அறிகுறியையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் புற்று நோயின் தீவிர தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

அடிவயிறு வலி
இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனென்றால் 80/100 புற்று நோயாளிகளுக்கு இடுப்பு அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத வலி உண்டாகும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பசியின்மை
பசியின்மை. குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போலிருந்தால் இதுவும் கருப்பை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலன கருப்பை புற்று நோயாளிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

அடிக்கடி சிறு நீர் செல்லுதல்
அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு. அவசரமாய் வருவது போல் உணர்வு என எப்போதும் காணப்பட்டால் அதுவும் கருப்பை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சாதரண சிறு நீர் தொற்று நோய்க்கும் இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். அதிக நீர் குடித்தால் அல்லது சிகிச்சையினால் சிறு நீர் தொற்று குணமாகிவிடும். ஆனால் இது குணமாகாது.

வயிறு பாதிப்பு
வயிறு பாதிக்கும். வயிற்று வலி, உப்புசம், வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும். மலச்சிக்கலும் அடிக்கடி உண்டாகும். மருந்துக்கள் மலச்சிக்கலுக்கு கொடுத்தாலும் அவை குணமாகாமல் தொடர்ந்தபடி இருக்கும்.

முதுகு வலி
முதுகு வலி கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக கீழ் முதுகில் வலி அடிக்கடி ஏற்படும்.

உறவின் போது வலி
கருப்பை பிறப்புறுப்பின் பாதைக்கு அருகிலேயே இருப்பதால் உடலுறவு கொள்ளும்போது தாங்க முடியாத வலி உண்டாகும்.

முறையற்ற மாதவிடாய்
மாதவிடாய் முறையில்லாமல் வருவது, அடிவயிறு வீங்குதல் ஆகியவை.

மருத்துவ பரிசோதனை கட்டாயம் வேண்டும்!! எனவே, சின்ன அறிகுறிக்கும் உங்கள் மனதை சமாதானம் செய்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் வரவிருக்கும் ஆபத்தை தடுக்க முடியும்.

Loading...
Rates : 0