குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை

Loading...

குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை

ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், ஆரோக்கியமாக, உயரமாக வளர்வார்கள் என்று ஆறு மாதங்களாக எக்வேடோரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

முட்டையை சமைத்தோ, அரை வேக்காடாகவோ, முழுமையாக வேகவைத்தோ, அல்லது ஆம்லேட்டாகவோ எந்த வடிவில் சாப்பிட்டாலும், அது இளம் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

குழந்தையின் முதல் இரண்டு வருடங்கள், அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கியமானது.

வயதுக்கு குறைந்த வளர்ச்சி

உயரமாக வளர்வதற்கான முக்கியத் தடை ஊட்டச்சத்துக் குறைபாடுதான். சிறுவயதில் ஏற்படும் நோய்தொற்றுகளும், நோயும் குழந்தைகளின் உயரத்தை பாதிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐந்து வயதுக்கு குறைவான 155 மில்லியன் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தில் இல்லை, குள்ளமாக இருக்கிறார்கள்.

சீரான உணவு

சில கலாச்சாரங்களில், சிறு குழந்தைகளுக்கு ஆரம்பகால உணவாக முட்டை கொடுப்பதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முக்கியமாக, அலர்ஜி ஏற்படலாம் என்ற கவலைகளும் காணப்படுவது இயல்பு.”

“நல்ல ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பான உணவு முட்டை. தாய்ப்பாலுடன் கூடவே, வேறு உணவுகளையும் அறிமுகப்படுத்தலாம் என்று தாய் நினைக்கும்போது, முட்டையை குழந்தைக்கு கொடுக்கலாம் – ஆனால், ஒருபோதும் நான்கு மாதங்களுக்கு முன்பு குழந்தைக்கு முட்டை கொடுக்க்க்கூடாது.”

எந்தவொரு நோய்த்தொற்று அபாயத்தையும் தவிர்க்க, முட்டை நன்றாக சமைக்கப்பட வேண்டும்.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அவர்கள் வளர்ச்சி சீராக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தாய்மார்களுக்கு பரிந்துரை செய்கிறது.

ஆறு மாதங்கள் பூர்த்தியான குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன், ஊட்டச்சத்து மிகுந்த பிற உணவுகளையும் கொடுக்கலாம். குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

“முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் உணவில் பல்வேறு வகைகள் இருக்கவேண்டும், குழந்தைகளுக்கு தேவைப்படும் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான உணவுகளையும், மாறுபட்ட சுவைகளையும் சாப்பிட அனுமதிக்கவேண்டும்” என்று பிரிட்டிஷ் ஊட்டச்சத்து அறக்கட்டளை அறிவுறுத்துகிறது.

“குழந்தைகளின் உணவில் புரதச்சத்து நிறைந்திருக்கவேண்டும். முட்டை மட்டுமல்ல, பீன்ஸ், பருப்பு, மீன், குறிப்பாக எண்ணெய் மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் அவர்களின் உணவில் இடம்பெறவேண்டும்.”

Loading...
Rates : 0