மேக்கப் செய்யும் பெண்களுக்கானது

Loading...

மேக்கப் செய்யும் பெண்களுக்கானது

நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றுவோம். அது மேக்கப்பிற்கும் பொருந்தும். பெண்கள் மேக்கப் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் சில உள்ளன. அவை என்னென்ன?

மஸ்காரா மற்றும் ஐ-லைனர்களைத் தனியாக வைத்துப் பயன்படுத்துவது நல்லது. வேறு ஒருவர் பயன்படுத்திய ஐ-லைனர் மற்றும் மஸ்காராவைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும்.

ஃபவுண்டேஷன் மற்றும் பவுடர் பயன்படுத்தும் போது, கன்னத்தில் ஆரஞ்ச் அல்லது பிரௌன் ஷேடுகளையும் கழுத்தில் வெண்மையான நிறத்திலும் பயன்படுத்தலாம். கழுத்தும் கன்னமும் தான் அடுத்தவர்கள் நம்மை கவனிக்கும் அதிகமாக கவனிக்கும் இடங்கள்.

தூங்கச் செல்வதற்கு முன்பும் மேக்கப் போடுவதற்கு முன்பும் கட்டாயம் மாய்ச்சரைஸர் பயன்படுத்த மறக்கக் கூடாது. அது உங்கள் சருமத்தை இன்னும் கொஞ்சம் மெருகூட்டும்.

ஒரே மஸ்காராவை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. சிலர் கை விரல்களால் மையை எடுத்துப் பயன்படுத்துவார்கள். அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஐ-லைனர் அல்லது பென்சில் மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்.

உதடுகளை எப்போதுமே பார்ப்பவர்களை முத்தம் கொடுக்கத் தூண்டும் அளவுக்குக் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். பாலம் பாலமாக வெடித்த உதடுகளைக் கொண்டிருத்தால் அது ஒட்டுமொத்த முகத்தின் அழகையே கெடுத்துவிடும். உதட்டுக்கு மாய்ச்சரைஸர் செய்ய மறக்காதீர்கள். குறிப்பாக, குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போகும். அதனால் லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்துவது அவசியம்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக, நிச்சயம் மேக்கப்பை கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும். அப்போது தான் சருமங்களால் நிம்மதியாக சுவாசிக்க முடியும். கிளன்சிங் மில்க் பயன்படுத்தி முகத்தைச் சுத்தம் செய்யுங்கள்.

Loading...
Rates : 0