கத்திரி முருங்கை குழம்பு செய்வது எப்படி

Loading...

கத்திரி முருங்கை குழம்பு செய்வது எப்படி


தேவையானப் பொருட்கள்:

கத்திரிக்காய் – 100 கிராம்
சிறிய முருங்கை க்காய்
வெங்காயம், தக்காளி – தலா 1
பூண்டு – 2 பல்
மிளகு – அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள், வறுத்து பொடித்த சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப் பிலை – சிறிதளவு,
புளி – நெல்லி க்காய் அளவு,
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.


செய்முறை:

கத்திரிக்காய், முருங் கைக்காய், தக்காளி, வெங் காய த்தை நறுக்கிக் கொள் ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை, துவரம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

இதில் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத் தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். தீயைக் குறைத்து, சீரகத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

Loading...
Rates : 0