சிறுநீரகக் கற்களை கரைக்கும் காய்கறிகள்

Loading...

சிறுநீரகக் கற்களை கரைக்கும் காய்கறிகள்

கேரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களைப் படியவிடாமல் தடுத்து, அவற்றைக் கரைக்கவும் உதவுகின்றன.

* வாழைப்பழம், எலுமிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சிட்ரேட் ஆகிய சத்துகள், சிறுநீரகக் கற்களின் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதைச் சிதைத்து, படியவிடாமல் தடுக்கின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடை போடுகின்றன.

* அன்னாசிப் பழத்தில் சிறுநீரகக் கற்களின் ‘பைப்ரினை’ சிதைக்கும் நொதிகள் உள்ளன. எனவே இப்பழம் எளிதில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

* கொள்ளு, பாதாம்பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவையும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்.

* சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அதோடு, சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சிறுநீரகக் கல்லால் தவிப்பவர்கள் பாஸ்பேட் மிகுந்த காபி, டீ, பிளாக் டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

Loading...
Rates : 0