பள்ளி பாளயம் சிக்கன் செய்வது எப்படி

Loading...

பள்ளி பாளயம் சிக்கன் செய்வது எப்படி


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் – அரைகிலோ
காய்ந்தமிளகாய் – 8
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 6
மல்லி இலை – சிறிதளவு
உப்பு ,எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:

எலும்பு நீக்கிய கறியை தனியே எடுத்து வைக்கவும். மிளகாய் வற்றலின் விதையை நீக்கி விட்டு தோல் பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பூண்டு வெங்காயத்தை பொடியாக கட் பண்ணனும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும். அதனுடன் மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் கறி, உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறிதாக்கி கிளரி விட்டு வேகவைக்கவும்.கறி நன்றாக வெந்ததும் தண்ணீர் சுண்டியதும் மல்லி தழை தூவி இறக்கவும்.

Loading...
Rates : 0