பாலுடன் இவற்றையெல்லாம் கலந்து குடித்தால் நன்மை கிடைக்கும்

Loading...

பாலுடன் இவற்றையெல்லாம் கலந்து குடித்தால் நன்மை கிடைக்கும்

ஊட்டச்சத்துகள் நிறைந்த பாலுடன் சில உணவுகளை கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

சூடான பாலில் துளசி கலந்து குடிப்பதால், தொண்டை கரகரப்பு, சளி, வறட்டு இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறைக்கிறது, மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கொடிப்பசலைக் கீரை சாறில் பாதாம் பருப்பை ஊறவைத்து, உலறிய பிறகு பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் வீதம் கலந்து பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஒரு டம்ளர் பாலுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் குடிப்பதால், நாள் முழுவதும் உடலின் ஸ்டாமினா தக்க வைக்கப்படும். இதற்கு பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் தேனில் உள்ள அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகள் தான் காரணம்.
பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் செரிமானம் மேம்படும். தேனில் உள்ள ப்ரீபயோடிக்ஸ் என்னும் ஊட்டச்சத்து, குடலில் மற்றும் செரிமான மண்டலத்தில் புரோபயோடிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தை சீராக்கும்.

உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை தினமும் சுத்தம் செய்ய நினைத்தால், பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். இதனால் மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது. ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.

Loading...
Rates : 0