உங்கள் கணவன் அன்பாக இருக்கிறார் என்பதை இந்த 7 அறிகுறிகளை வைத்து தெரிஞ்சிக்கலாம்

Loading...

உங்கள் கணவன் அன்பாக இருக்கிறார் என்பதை இந்த 7 அறிகுறிகளை வைத்து தெரிஞ்சிக்கலாம்

உடல் நலத்தை மட்டுமல்ல, உறவின் நலத்தையும் கூட சில அறிகுறிகளை வைத்து அறிந்துக் கொள்ள முடியும். அதிலும் முக்கியமாக பெண்கள் சில அறிகுறிகளை வைத்து தனது கணவன் தன்னுடனான உறவில் எப்படி இருக்கிறான் என அறிந்துவிடுவார்களாம். அந்த வகையில், கணவன் தன் மீது ஆசையுடன் தான் இருக்கிறான் என பெண்கள் இந்த 7 அறிகுறிகளை வைத்து அறிந்துவிடுகிறார்கள்…

அறிகுறி #1 எந்த ஒரு செயலிலும் நல்லதை பார்ப்பது. தன்னை சுற்றி நடக்கும் எந்த ஒரு செயலை கொண்டும் மனைவியுடன் நெருங்கியே இருக்க முயல்வது.

அறிகுறி #2 வீட்டு வேலை, வெளி வேலை, உடை, சமையல் என மனைவி செய்யும் எந்த ஒரு செயலையும் ரசிப்பது.

அறிகுறி #3 அருகே அமர்ந்து படம் பார்பதாக இருக்கட்டும், முத்தமிடுவது, மசாஜ் செய்துவிடுவது என உடல் ரீதியாக உங்களோடு இணைந்தே இருக்க காரணங்கள் தேடி கண்டுப்பிடிப்பது.

அறிகுறி #4 மனைவி பிஸியாக இருக்கும் போதே அருகேயே இருப்பது. அவருக்கு உதவியாக செயற்படுவது. தான் பிஸியாக இருக்கும் நேரங்களிலும் கூட மனைவியுடன் நேரம் செலவளிப்பது.

அறிகுறி #5 கண்களாலே தனது விருப்பதை மனைவியிடம் தெரிவிப்பது. குறையாத ஆசைகளுடன் இதயத்தில் காதலை நிறைப்பது.

அறிகுறி #6 காரணம் கிடைக்கும் போதும், காரணத்தை உருவாக்கியும், காரணமே இல்லாமலும் கூட முத்தங்களை பரிசளித்துக் கொண்டே இருப்பது.

அறிகுறி #7 பிரிந்திருக்கும் போதும், நேரம் தவறாமல் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக் கொண்டே இருப்பது.

Loading...
Rates : 0