சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா இதோ அவர்களின் ரகசியம்

Loading...

சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா இதோ அவர்களின் ரகசியம்

ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசி. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் வேறுபடும். இதற்கு அந்த ராசியை ஆளும் அதிபதிகள் தான் காரணம். 12 ராசிகளுள் மிகவும் திமிர் பிடித்த மற்றும் கோபக்கார ராசியாக கருதப்படுவது சிம்ம ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் அதிக கோபத்தைக் கொள்வதோடு, யாருக்கும் அடங்காமல் இருப்பர் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.

அதிலும் சிம்ம ராசி பெண்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்கள் யாருக்குமே அடங்காமல் இருப்பர் என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது. சிம்ம ராசியை ஆள்வது சூரிய பகவான் ஆகும். நிச்சயம் இந்த ராசிக்காரர்களிடம் சூரியனின் குணங்கள் இருக்கத் தான் செய்யும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் சூரியனைப் போன்று மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இந்த சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி ஏராளமான தவறான எண்ணங்கள் உள்ளது.

இக்கட்டுரையில் சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சில தவறான கருத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைப் படித்த பின்பாவது நினைப்பினை மாற்றிக்கொள்ளலாமே!..

எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஓர் கருத்து. சிம்ம ராசிப் பெண்களுக்கு தன் மீது கவனத்தை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் கவர வேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். தனக்கு பிடித்தவர்கள் மற்றும் தான் பழக விரும்புபவர்களைத் தான் ஈர்க்க விரும்புவார்களே தவிர, முகம் தெரியாதவர்களை அல்ல.

ராணிப் போன்று நடத்த நினைப்பர்
சிம்ம ராசிப் பெண்கள், மற்றவர்கள் தங்களை ராணிப் போன்று நடத்த வேண்டுமென விரும்புவார்கள் என்று நீங்கள் நினைத்திருத்தால், உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த ராசிப் பெண்களுக்கு மற்றவர்கள் தன்னை ராணி போன்று நடத்த நினைப்பதில்லை. அவர்கள் நினைப்பதெல்லாம், மரியாதை தான். இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்களோ, அதேப் போல் மற்றவர்களும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென நினைப்பார்கள். இதை பலரும் தவறாக நினைத்து, ஒரு பொய்யான புரளியை சிலர் மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் புண்படும்படி பேசுவர்
சிம்ம ராசிப் பெண்கள் முதுகுக்கு பின்னால் எப்போதும் ஒருவரைப் பற்றி பேசுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்களது கருத்துக்களை நேரடியாக உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது, சில நேரங்களில் அது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தன் கட்டுப்பாட்டில் இருக்க நினைப்பர்
சிம்ம ராசிப் பெண்கள் எதையும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென நினைப்பர் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். உண்மையில் இவர்களுக்கு மற்றவர்களது கட்டுப்பாட்டில் இருக்க எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் பிடிக்கும். எனவே மற்றவர்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முன்வராவிட்டால், இவர்கள் முன்வந்து அப்பிரச்சனைக்கு தீர்வு காண தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள். அதே சமயம் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்டு, பின்பு தான் எதற்கும் தீர்வு காண்பார்கள்.

உணர்ச்சி இல்லாதவர்கள்
சிம்ம ராசிக்காரர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாத, உணர்ச்சி இல்லாத ஜடம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களது மனதிற்குள் நண்பர்கள், குடும்பம் மற்றும் மற்றவர்கள் மீதான அக்கறை கட்டாயம் இருக்கும்.

சுயநலமிக்கவர்கள்
சிம்ம ராசிக்காரர்கள் சுயநலமிக்கவர்கள் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள். தனது இலக்கை அடைய முயற்சிக்கும் போது வேறு எதைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருக்காது. அதே சமயம் சிம்ம ராசிக்காரர்களிடம் பகிர்ந்து கொள்வது, நண்பர்களுக்கு மற்றும் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று வரும் போது, இவர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர்.

மற்றவர்களுடன் எளிதில் பழகுவார்கள்
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகுவார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், சிம்ம ராசிப் பெண்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பேச மிகவும் தயங்குவார்கள். இந்த ராசிக்காரர்களுடன் ஒருவர் நெருக்கமாக பழக தாமதமானாலும், இவர்களது குணம் அறிந்த பின், கட்டாயம் இவர்கள் மீது காதலில் விழுந்துவிடுவர். அந்த அளவு சிம்ம ராசிக்காரர்கள் இனிமையான குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

திமிர்பிடித்தவர்கள்
முக்கியமாக சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் திமிர்பிடித்தவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால், மற்றவர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருந்து, திமிருடன் நடந்து கொள்வது போன்று தோன்றலாம். ஒருவர் வலுவான கருத்துக்களுடன், தன்னம்பிக்கையையும் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் அது மற்றவர்களுக்கு திமிருடன் நடந்து கொள்வது போன்று தான் இருக்கும். இதற்கு சிம்ம ராசிக்காரர்களைக் குறைக்கூறுவது என்ன நியாயம்.

ஆடம்பரமாக இருக்க நினைப்பர்
சிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பரமாக இருக்க வெட்டி செலவு செய்வார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தரத்தையும், அளவையும் காண்பார்கள் தான். ஆனால் இது வாழ்வில் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடம்பரமான சொகுசு கார், விலையுயர்ந்த ஹேண்ட் பேக் மற்றும் நகைகள் தேவையில்லை. ஆனால் தாங்கள் வாழும் வாழ்க்கை எப்போதும் சிறப்பானதாக இருக்க விரும்புவர்.

Loading...
Rates : 0