போக்க தினமும் இந்த கஷாயத்தில் 3 கப் குடிங்க

Loading...

போக்க தினமும் இந்த கஷாயத்தில் 3 கப் குடிங்க

குளிர்காலம் வந்தாலே ஓயாத இருமல் ஜலதோஷம் உண்டாகும். அதிலும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நெஞ்சில் கபம் கட்டி மூச்சு விடவே சிரமப் படுவார்கள். அவர்களுக்காக எளிய முறையில் கஷாயம் தயாரிக்கும் முறையை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இவற்றால் பக்க விளைவுகள் இல்லை. இதனை 3 வேளைக்கும் அருந்தி வந்தால் எப்பேர்பட்ட கபமும் கரைந்து வெளியேறிவிடும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை :
சுக்கு, மிளகு திப்பிலி , வால் மிளகு அதிமதுரம், சித்தரத்தை போன்றவற்றை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். சம அளவில் தனித்தனியாக வாங்கியும் ஒன்றாக கலந்து கொள்ளலாம் அல்லது இவை எல்லாம் கலந்து ரெடிமேடாகவும் இந்த பொடி கடைகளில் கிடைக்கிறது.

தேவையானவை :
மூலிகை இலைகள் :
துளசி- ஒரு கைப்பிடி வெற்றிலை – 2 புதினா – 1 கைப்பிடி கற்பூரவல்லி – 3 செய்முறை : முதலில் எல்லா மருந்து இலைகளையும் நன்றாக கழுவி பொடியாக ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அவற்றுடன் மேலே சொன்ன மூலிகை பொடியையும் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :
இதனை சூடாகவே குடியுங்கள். இதனை 3 வேளைக்கு குடித்தால் கபம் கரைந்து ஆரோக்கியமான நுரையீரல் பெறுவீர்கள். இலைகளை நறுக்குவதற்கு பதிலாக மிக்ஸியில் அரைத்தும் நீரில் போட்டு கொதிக்க வைக்கலாம்.

மூலிகை மாத்திரை :
இதனை மாத்திரை வடிவத்திலும் சாப்பிடலாம். வெல்லப்பாகு வைத்து அதனடுன் இந்த பொடிகளையும் அரைத்த மூலிகை இலைகளையும் கலந்து சிறு சிரு உருணடைகளாக வெயிலில் காய வைத்து அவ்வப்போது சாப்பிடுவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Loading...
Rates : 0