உங்கள் எச்சிலை ஏன் துப்பக்கூடாது என்ற உண்மை தெரியுமா

Loading...

உங்கள் எச்சிலை ஏன் துப்பக்கூடாது என்ற உண்மை தெரியுமா

எச்சில் என்பதற்கும் உமிழ்நீர் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அண்மையில் கேட்கப்பட்டிருந்தது.

எச்சில் என்றால் என்ன? உமிழ்நீர் என்றால் என்ன?

உண்மையில் இரண்டுமே ஒன்றுதான் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் உமிழ் நீர் என்பது வாய்க்குள் இருக்கும்வரை வழங்கப்படும் பெயர். வாயிலிருந்து வெளிக் கொண்டுவரப்படுவதற்கு எச்சில் என்று பெயர்.

வாயிலுள்ள உமிழ்நீர் நம்மால் வெளியேற்றப்படுவதை எச்சில் என்கிறோம். அதே உமிழ்நீர் எம்மை அறியாமல் வெளியேறுவதை வீணீர் (வீண்+நீர்) என்கிறோம். உமிழ்நீர் வெளியேற்றப்படும் செயற்பாட்டை துப்புதல் என்றும், வெளியேறும் செயற்பாட்டை வடிதல் என்றும் சொல்கிறோம்.

ஒரு மனிதனுக்கு உமிழ்நீர் இன்றியமையாதது. உடலின் சமிபாட்டுத் தொகுதிக்கு ஆரம்ப மூலாதாரம் உமிழ்நீர்தான். அதேபோல வாயில் ஏராவது தேவையற்ற சடப்பொருள் சென்றுவிட்டால் அதை துப்புதல் ஊடாக வெளியேற்றவும் உமிழ்நீர்தான் தேவைப்படுகின்றது.

எச்சில் என்பது அருவருப்பானதா?

இது மனிதர்களைப் பொறுத்து மாறுபடும். ஆரோக்கியமான மனிதர்களின் எச்சிலால் நோய்த்தொற்று ஏற்படுவது குறைவாகும். அதேபோல் காற்றின்மூலம் தொற்றக்கூடிய நோய்களையுடைய மனிதர்களின் எச்சில் சூழலுக்கு கேடானதாகும். எது எவ்வாறாயினும் பொது இடங்களில் எச்சில் துப்புவது மோசமான ஒரு செயற்பாடாகும்.

காறித் துப்புதல் வன்முறை வழியிலான தாக்குதலுக்கு ஈடானது. அது மற்றவர்கள் மத்தியில் எரிச்சலைத் தோற்றுவிப்பதாகும்.

உங்களை யாராவது துப்பினால் உடனடியாக என்ன செய்யவேண்டும்?

சோப்பாலும், அதிக நீராலும் எச்சிலை கழுவிவிடுங்கள்.

எச்சில் உங்களுடைய கண்கள், மூக்கு அல்லது வாய்க்குள் சென்றுவிட்டால், அதிக அளவிலான குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள்.

நோய்த்தொற்று ஆபத்தை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று அறிவுரை பெறவும்.

Loading...
Rates : 0