எப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்

Loading...

எப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்

உலகளவில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது உடல் குண்டாகி விடுவதாக ஆய்வில் தெரியவந்தது. எனவே உடல் பருமன் நோயை தடுக்க கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன்மூலம் குழந்தை பருவத்திலேயே அவர்களின் உடல் பருமனை தடுக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிக நிறையுடனான குழந்தை பிறப்புக்கும் உடல் பருமன் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்?

இது தொடர்பாக சியோலில் உள்ள ஈவ்கா பெண்கள் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான யே சூன் கிம் கூறுகையில் :- உடல் பருமனை தடுக்கும் சிறந்த மருந்தாக தாய்ப்பால் திகழ்கிறது. எனவே அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Loading...
Rates : 0