சோயா ரைஸ் செய்யும் முறை

Loading...

ஷாங்காய் நூடுல்ஸ் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
மீல்மேக்கர் – 1/2 கப்,
காய்ந்தமிளகாய் – 3,
கரம்மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


தாளிக்க…

பட்டை – சிறிய துண்டு,
லவங்கம் – 2,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


அலங்கரிக்க…

தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை, வட்டமாக நறுக்கிய தக்காளி, டொமேட்டோ சாஸ் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்து, அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம்மசாலாத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி, அதன் மீது டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளியால் அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Rates : 0