நல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாகும் உறவுகளே

Loading...

நல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாகும் உறவுகளே

வாழ்வென்பது ஒருமுறை.. வாழ்த்தட்டும் நம் தலைமுறை என்ற வாசகத்தினை நாம் அடிக்கடி பள்ளி, கல்லூரி மற்றும் அரசியல் மேடைகளில் கேட்கலாம். அதற்கான விளக்கம் என்னவெனில், பல தலைமுறைகள் வாழ்த்துகின்ற அளவினுக்கு நாம் பெயரோடும், புகழோடும் பிறர்க்கு பயன்படுகிற சிறந்ததோர் வாழ்க்கையினை வாழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

நல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள்.. வாழ்க்கை அழகாகும் உறவுகளே.!

பிறர் போற்றுகிற வகையில் ; பார் போற்றுகிற வகையில் இந்த மண்ணில் நாம் வாழ்ந்திட, நமது இலட்சியத்தினை அடைந்திட வேண்டுமெனில், நம்மை ஊக்கப்படுத்துகிற, சோர்ந்துவிழுகிற வேளைகளில் தாங்கிப்பிடிக்கிற உறவுகளும், நட்புகளும் வேண்டும். அப்படியான உறவுகளும், நட்புகளும் அமைந்துவிட்டதெனில் நிச்சயம் நம் வாழ்க்கை அழகான ஒன்றாகும்.

நல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள்.. வாழ்க்கை அழகாகும் உறவுகளே.!

நல்ல நண்பர்கள் தானாகவே அமைந்திடுவார்கள் என்றில்லாமல், நமது நண்பர்களை நாம் நல்லவர்களாக மாற்றிட முனைவோம். பிறரின் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயனவற்றை தூக்கி தூர எறிவோம். வாழ்வெனும் பாதை அழகாகும்.. நல்ல நட்புகள் அமைந்திட்டால்.

Loading...
Rates : 0