புகைப்பழக்கம் உடையவரா நீங்கள் எச்சரிக்கை கேட்கும் திறனையும் இழப்பீர்கள்

Loading...

புகைப்பழக்கம் உடையவரா நீங்கள் எச்சரிக்கை கேட்கும் திறனையும் இழப்பீர்கள்

புகைப்பிடிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட புகை பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்கும் திறன் குறையும் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் கேட்கும் திறனை 20 இலிருந்து 60 சதவிகிதம் வரை பாதிக்கும். ஒலி மாசுவினால் ஏற்படுவதை விட புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும் என்பது கவனிக்கத்தக்க விடயம்.

புகைப்பழக்கம் உடையவரா நீங்கள்? எச்சரிக்கை! கேட்கும் திறனையும் இழப்பீர்கள்!

மேலும் இது குறித்து ஜப்பானிய விஞ்ஞானி குயான்குயான் தெரிவிக்கையில் :- பல ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி முக்கிய காரணமாக அமையும். கேட்கும் திறன் முழுவதும் பாதிக்கப்படுவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்துவது மிக அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்

Loading...
Rates : 0