முளைக்கீரை புளிக்கடைசல் செய்முறை

Loading...

முளைக்கீரை புளிக்கடைசல் செய்முறை


தேவையான பொருட்கள்:

முளைக்கீரை – ஒரு பெரிய கட்டு,
புளி – ஒரு சிறிய எலுமிச்சையளவு,
பச்சை மிளகாய் – ஆறு(அ) ஏழு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி,
கடுகு- ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு,


செய்முறை:

கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து கடுகு வெடித்தவுடன் வெங்காயத் துண்டுகளை வதக்கிக்
கொள்ளவும். கீரையையும், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கிளறி தேவையான தண்ணீரைச் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசித்து விடவும். கடைசல் தயார்.

சுடு சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும்.

பின் குறிப்பு : இதே முறையில் அரைக்கீரையை உபயோகித்தும் தயாரிக்கலாம்.

Loading...
Rates : 0