விந்தணு குறைவான ஆண்களுக்கு இவ்வளவு பிரச்சினையா

Loading...

விந்தணு குறைவான ஆண்களுக்கு இவ்வளவு பிரச்சினையா

ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மகப்பேறு பிரச்சனையுடன் மட்டும் நின்றுவிடாது, அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆய்வாளர்களின் தகவல்படி ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையானது அவர்களது உடல்நலம் மற்றும் கருவுறுதல் மதிப்பீட்டின் குறியீடாக இருக்கிறது.

இத்தாலியில் குழந்தைபேறு இல்லாமல் இருக்கும் ஆண்களை பரிசோதித்ததில் குழந்தை பேறு என்பதையெல்லாம் கடந்து உடல் நல பிரச்னைகளுக்கு விந்தணு முக்கிய காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இத்தாலியின் ப்ரெஸ்ஸியா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் அல்பர்டோ ஃபெர்லின் தெரிவிக்கையில் :- ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவு என்பது வளர்சிதை மாற்றம் இதய நோய்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது என்பது எங்களுடைய ஆய்வில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

விந்தணு குறைவான ஆண்களுக்கு இவ்வளவு பிரச்சினையா ???

மேலும் கருத்தரித்தல் தொடர்பான விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் முதன்மை உடல் நல மருத்துவர்கள் பார்வையில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நோய் வாய்ப்படும் வாய்ப்பும் இறக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது என்று ஃபெர்லின கூறிஉள்ளார்.

5177 ஆண்களை பரிசோதித்ததில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 20 சதவிகிதமான ஆண்கள் குண்டாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமான கொழுப்பு அதிகமான இரத்த அழுத்தம் மற்றும் அதிகமான கெட்டு கொழுப்பு இருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் உடல்நலன் தொடர்பான இந்த பிரச்னைகளில் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவாக இருப்பது முக்கிய தொடர்பு வகிக்கிறது. விந்தணுக்கள் குறைவான ஆண்கள் ஏனைய மருத்துவ பிரச்சனைகளுக்கும் பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading...
Rates : 0