வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பல அதில் சில இதோ

Loading...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பல அதில் சில இதோ

காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறையானது ஜப்பான் மக்களிடம் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதை தான் “வாட்டர் தெரபி” என்கின்றனர் பொதுமக்கள். தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சில..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பல.. அதில் சில இதோ.!

1. நமது குடல் சுத்தமாக்கப்படும். இதனால் சிறிது நேரத்திலேயே சீரான முறையில் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் மலம் கழிக்க முடிகிறது.

2. தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

3. தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

4. அதிகாலையில் தினமும் 1 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்து விட்டு பின் சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை மூலம் ஏற்படும் தீவிரத்தை வராமல் தடுக்கலாம்.

5. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

6. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் எடை குறைக்கிறது.

Loading...
Rates : 0