கேடோ கேடோ பராத்தா ரோல்ஸ் செய்யும் முறை

Loading...

கேடோ கேடோ பராத்தா ரோல்ஸ் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு, உப்பு,
சிறிதளவு எண்ணெய்.


ஃபில்லிங்கிற்கு…

இது இந்தோனேஷியா நாட்டைச் சார்ந்த வேர்க்கடலை சாஸ் ஆகும்.


வேர்க்கடலை சாஸ் செய்ய…

வேர்க்கடலை – 1/2 கப்,
புளி – சிறிது,
உப்பு – தேவைக்கு,
துருவிய வெல்லம் – 1/2 கப்,
காய்ந்த மிளகாய் – 6,
பூண்டு – 10 பல்,
சோயா சாஸ் – சிறிது,
எண்ணெய் – 2 டேபிள்
ஸ்பூன்(வறுக்க), கொத்தமல்லி- தேவைக்கு


எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூண்டு, மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுது, கரைத்த புளி, உப்பு, துருவிய வெல்லம் அனைத்தையும் கொதிக்க வைத்து இறக்கவும். சாஸ் ரெடியாகி விடும். இந்த சாஸை மசித்த உருளைக்கிழங்கு, சிறிது கொத்தமல்லி சேர்த்து கலந்து, சிறு சிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தி மாவில் ஸ்டஃப் செய்து வட்டங்களாக இட்டு சப்பாத்திக் கல்லில் போட்டு இருபக்கமும் வெந்தபின் எண்ணெய் அல்லது நெய் தடவி பொன்னிறமானவுடன் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

Loading...
Rates : 0