தாளித்த சேவை செய்யும் முறை

Loading...

தாளித்த சேவை செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

வேக வைத்த சேவை – 1 கப்,
தூள் உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – சிறிது,
வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக அரிந்தது),
பச்சை மிளகாய் – 3 (பொடியாக அரிந்தது),
கறிவேப்பிலை – சிறிது,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – தேவைக்கு,
எலுமிச்சைப் பழச்சாறு – சிறிது,
வறுத்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, அதன்மேல் வறுத்த முந்திரியை போடவும். சேவையில் எலுமிச்சைப் பழச்சாறு, தூள் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கலக்கி உதிர்த்து வைக்கவும். இத்துடன் தாளித்ததை சேர்த்து கலக்கவும். தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Rates : 0