மட்டர் டமாடர் தால் செய்யும் முறை

Loading...

மட்டர் டமாடர் தால் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

பயத்தம்பருப்பு – 1 கப்,
தக்காளி – 2,
பட்டாணி – 1
கைப்பிடி, கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – அலங்கரிக்க,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

தக்காளியை பொடியாக அரிந்து வைக்கவும். பட்டாணியை உரித்துக் கொள்ளவும். குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு பயத்தம்பருப்பை வேக விடவும். 3 விசில் வந்த பின் திறந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வறுக்கவும். அதில் தக்காளி, பட்டாணி, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டர் டமாடர் தால் ரெடி. சூடாக சப்பாத்தி மற்றும் புரோட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Loading...
Rates : 0