மெக்ஸிகன் சாலட் வித் இத்தாலியன் பெஸ்தோ சாஸ் செய்யும் முறை

Loading...

மெக்ஸிகன் சாலட் வித் இத்தாலியன் பெஸ்தோ சாஸ் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் – 2 கப்,
பேபி கார்ன் (விருப்பப்பட்டால்) – 1 கப்,
செர்ரி தக்காளி – 10,
உப்பு – தேவைக்கேற்ப,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
நீளமாக நறுக்கிய கோஸ் – 1 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்,
கார்லிக் பிரெட்டு – 6 ஸ்லைஸ்கள்
(இவற்றை சதுரமாக வெட்டி, எண்ணெயில்
பொரித்தெடுத்துக் கொள்ளவும்),
இத்தாலியன் பெஸ்தோ சாஸ் – 1/2 கப்.


இத்தாலியன் பெஸ்தோ சாஸ் செய்ய…

பேசில் இலைகள் – 1 கப்,
வால்நட் (அ) வேர்க்கடலை – 1/2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
மிளகுத்தூள் – சிறிது,
பூண்டு – 10 பல்,
ஆலிவ் எண்ணெய் – 1/2 கப்.


எப்படிச் செய்வது?

சிறிதளவு எண்ணெயில் பூண்டை வதக்கி மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து மறுபடி சிறிது ஆலிவ் எண்ணெயில் ஒருமுறை வதக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதை நான்கு நாட்களுக்கு வைத்திருந்து உபயோகிக்கலாம். சாலட்டிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஆலிவ் எண்ணெய் மற்றும் இத்தாலியன் பெஸ்தோ சாஸ் சேர்த்து ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Loading...
Rates : 0